”கஜானாவில் பணம் இல்லை”..!! ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து, செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் இறப்பு, பொருளாதார வரம்பு உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு தகுதியற்ற பயனாளிகளை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 17 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் தாமோ அன்பரசன் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ”ஒரு கோடியே 17 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கஜானாவில் பணம் குறைவாக இருப்பதால், சிலருக்கு பணம் வழங்க முடியவில்லை. விரைவில் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படும்” என்றார்.
Read More : வயிற்றில் குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்த சித்தி..!!