அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த வீர தீர சூரன்..!! சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடியா?
விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ்-க்கு முன்பே 120 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான திரைப்படம் தங்கலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா படங்களுக்கு பிறகு முன்னணி நடிகரான விக்ரம் உடன் அருண்குமார் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீர தீர சூரன் திரைப்படம் விக்ரமின் 62-ஆவது படமாகும். ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்றும், இரண்டாம் பாகம் தான் முதலில் வெளியாகும் என்றும், அதுவும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் இதனை தொடர்ந்து வெளியாகும் என்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் முழுநீள கமர்ஷியல் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
வீர தீர சூரன் படத்தின் டீசருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கான வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமை மட்டும் 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழக திரையரங்குகள் உரிமை 20 கோடிக்கும் விற்பனையாகி இருக்கின்றதாம். மற்ற மாநிலங்கள் வெளிநாட்டு உரிமை அதுவும் எப்படியும் 20 கோடிக்கு மேல் அதிகமாக விற்பனையாகும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமை மட்டும் ரிலிசுக்கு முன்பே 120 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
Read more ; குளிர்காலத்தில் அதிகமா தண்ணீர் குடிக்கலன்னா.. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும்… மருத்துவர்கள் வார்னிங்..