மகள்களை சினிமா பக்கமே வர விடாத நடிகை.. யார் தெரியுமா?
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல ரசிகர்களின் மனதை வென்றார். 1980களில் சில திரைப்படங்களில் நடித்த இவர், சில ஆண்டுகள் ஓய்வு பெற்றார். ராம் (2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து, இவர் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளை பெற்றார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.
இவர், இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவரது மகள்கள் சினிமா பக்கமே தலை காட்டவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே இப்போது மருத்துவராகி உள்ளனர். பொதுவாக சினிமாவைப் பொறுத்த வரை, நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாக தான் வருவார்கள். ஆனால், சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் போது நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டும் தனது 2 மகள்களை சினிமா பக்கமே வரவிடாமல் அவர்களை மருத்துவராக்கியிருக்கிறார்.
Read more: 13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..