அண்ணாமலை பாணியில் அடுத்த அடியை எடுத்து வைக்கும் விஜய்.. ஊழல் பட்டியல் ரெடி? திமுக அதிமுக-வுக்கு செக்!!
தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மற்றும் ஆட்சி செய்த கட்சிகளின் ஊழல் பட்டியல்களைத் தயார் செய்ய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுகவை குறிவைத்து வழக்கறிஞரின் உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்தன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.
தவெக மாநாட்டில் ஊழல்களைப் பற்றியும், ஆட்சி செய்து வரும் வந்த கட்சிகளைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களையும், கருத்துகளையும் விஜய் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சியின் ஊழல்களைப் பற்றி பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் முன்பு அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அதன் பிறகே குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என்று நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், முடிந்தால் ஊழல் பட்டியலுடன் ஆளுநரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியோடு திமுக, அதிமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியல் தயார் செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை தயார் செய்து ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், அந்த சந்திப்பைத் தொடர்ந்து விஜயும் மாவட்ட பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் தற்போது தீவிரமாக ஊழல் பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர்.
இந்த ஊழல் பட்டியலைத் தயார் செய்த பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக பொறுப்பாளர்களைச் சந்தித்து கொள்கை விளக்க கூட்டம், பொதுக் கூட்டங்களில் இரண்டு கட்சிகளின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பொதுமக்களை சந்திக்க தவெகவினர் முடிவெடுத்துள்ளதாகவும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த ஊழல் பட்டியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வகையில் இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more ; அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை விவகாரம்.. காவல்துறை சீரழிந்து கிடக்கிறது..!! – அன்புமணி சொன்ன பாயிண்ட்