ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை.. புத்தாண்டை முன்னிட்டு பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களைப் பொருளாதாரச் சுதந்திரமுடையவர்களாக மாற்றும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 2024 – 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்ட தவணை தொகையை ரூ.2000 ஆக அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த வியூகங்கள் கட்சிகளால் வகுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியானது.
தி.மு.க. அரசு வகுத்துள்ள இந்த வியூகத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு பெரியளவில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் நம்புகிறது. பொங்கலுக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; இந்த அன்றாட பழக்கங்கள் உடலுக்கு ஸ்லோ பாய்சனாக மாறலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்.