மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு 3% DA உயர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
3 சதவீத டிஏ உயர்வு நிச்சயம், ஆனால் அது 4 சதவீதமாக அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை இது தொடர்பாக முடிவெடுத்த பின் அனைத்தும் தெளிவாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது போக 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாம்.
சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவீதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 46 சதவீதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.
இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவீதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ளனர்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயரும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஓய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏர் சம்பளம் தரப்படுகிறது. இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவீத உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவீதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 46 சதவீதமாக உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.
Read more ; 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு…!