முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

5 நாள் தான் உங்களுக்கு டைம்...! தவெக கட்சிக்கு பகுஜன் சமாஜ் கொடுக்கும் நெருக்கடி...! எதுக்கு தெரியுமா...?

It has been informed that legal action will be taken if the elephant symbol on the flag of Tamil Nadu Victory Association is not removed.
07:34 AM Oct 20, 2024 IST | Vignesh
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இதன் பிறகு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.

Advertisement

ஆகஸ்ட் 22-ம் தேதி விஜய் த.வெ.க கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. மேலும் த.வெ.க பாடலையும் அறிமுகப்படுத்தினார். வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த உள்ளார் விஜய்.

இந்த நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், என கூறி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வழங்கப்பட்டது.

சின்னங்கள், பெயர்கள் ( முறையற்ற பயன்பாட்டு) தடுப்புச் சட்டம் 1950-க்கு உட்பட்டு இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். அரசியல் கட்சி கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதில் அளித்து இருந்தது.

தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத் தலைவர் சந்தீப் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் எதிர்வரும் 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்கிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அதை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BSPelection commissiontvkvijay
Advertisement
Next Article