For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று முதல் 'ISRO YUVIKA 2024'க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.! 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.!

02:00 PM Feb 21, 2024 IST | 1newsnationuser4
இன்று முதல்  isro yuvika 2024 க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்   9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு
Advertisement

இஸ்ரோ யுவிகா (ISRO YUVIKA) 2024இன் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இளம் விஞ்ஞானி திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை, இன்று முதல் jigyasa.iirs.gov.in/yuvika என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிரப்பலாம். ஆர்வமுள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, மே மாதம் திட்டமிடப்பட்ட இரண்டு வார குடியிருப்பு திட்டத்திற்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவை இளைய மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 'யுவ விஞ்ஞானி கார்யக்ரம் (YUVIKA) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள இந்த இரண்டு வார குடியிருப்பு திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தகுதி அளவுகோல்களை சரி பார்த்த பின்னர், இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை, 2024 ஆம் ஆண்டுக்கான யுவிகா விண்ணப்பங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோடைகால முகாமிற்கு விண்ணப்பிப்பதற்கும், பங்கு பெறுவதற்கும் கட்டணம் எதுவும் தேவையில்லை.

இந்த விண்ணப்பத்தை நிரப்பிய பின் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் லிங்கை, கிளிக் செய்யவும். பின்னர் அதில் வரும் SpaceQuiz-இல் பங்கேற்க வேண்டும். பின்னர் சுய விவரத்தையும், கல்வி தகுதிகளையும் அதில் நிரப்ப வேண்டும். நீங்கள் ஆன்லைனில் பதிவிடும் சான்றிதழ்களை உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டபின் அனுப்பவும்.

ISRO YUVIKA 2024 திட்டத்திற்கான மாணவர்களின் தேர்வு, 8ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், ஆன்லைன் வினாடி வினாவில் வெளிப்பட்ட செயல் திறன், ஒலிம்பியாட் அல்லது அதற்கு இணையான ரேங்க், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றது, அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்றது ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.

முதல் தேர்வு பட்டியல் மார்ச் 28, 2024 அன்று வெளியாக உள்ளது. இரண்டாம் தேர்வு பட்டியல் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாக இருக்கிறது. மே 13 முதல் 24 வரை, இந்த ISRO YUVIKA 2024 திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: Online applications for ISRO YUVIKA 2024 programme opens from today. Interested students from 9th grade can apply.

Read More: ‘PAYTM’ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.! யுபிஐ சேவைகளுக்கு ‘AXIS’ வங்கியுடன் விண்ணப்பம்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

Tags :
Advertisement