For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ISRO இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவர்கள் பதிவு பிப்.20 முதல் தொடக்கம்.! விண்ணப்பிப்பது எப்படி.?

07:25 AM Feb 17, 2024 IST | 1newsnationuser7
isro இளம் விஞ்ஞானி திட்டம்  மாணவர்கள் பதிவு பிப் 20 முதல் தொடக்கம்   விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

ISRO Young Scientist Programme: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி 2024 திட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் பள்ளி மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவின் இளம் விஞ்ஞானி திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விவரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Advertisement

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் 2024 திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் தங்கள் கேரியரை தேர்வு செய்ய ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களுக்காக வீட்டிலிருந்தே கற்கக்கூடிய வகையில் 2 வாரம் நடத்தப்படுகிறது.

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதள அறிக்கையின் படி " இந்தத் திட்டம் இளம் மாணவர்களிடையே வளர்ந்து வரும் விண்வெளி அறிவியல் விண்வெளி தொழில்நுட்பம் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்கள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தை 'Catch the young' என குறிப்பிட்டு கூறுகிறது.

இந்தத் திட்டத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளை கீழே காணலாம் .

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் 2024 திட்டத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: jigyasa.iirs.gov.in/registration என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். உங்களுக்கான பயனாளர் ஐடி கிரியேட் செய்த பின் நீங்கள் பதிவு செய்த இமெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட லிங்கை கிளிக் செய்து இஸ்ரோ இணையதளத்தில் லாக் இன் செய்யவும். இப்போது, ​​'விண்வெளி வினாடி வினா போட்டியில் பங்கேற்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்காக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் படித்து தெரிந்து கொள்ளவும். மாணவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும் அவரது கல்வி விவரங்களையும் பதிவு செய்யவும். இது தொடர்பாக இணையதளத்தில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். நீங்கள் பதிவு செய்ததாக வரும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும் .

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: இந்தியாவில் பிறந்து தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கூட்டி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் சரி பார்க்குமாறு இஸ்ரோ அறிவுறுத்துகிறது. ஏனெனில் ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை மீண்டும் பிழை திருத்த முடியாது. மேலும் இந்தத் திட்டம் தொடர்பான புதிய தகவல்களை அறிய இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 8-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், ஆன்லைன் வினாடி வினாவில் அவர்களது செயல் திறன், கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டது விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் வெற்றி பெற்றது ஒலிம்பியாட் தேர்வில் கடந்த 3 ஆண்டுகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றது சாரணர் இயக்கம் என்சிசி மற்றும் என்எஸ்ஸ் போன்ற குழுக்களில் கடந்த மூன்று ஆண்டுகள் பங்கேற்றது மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து பள்ளிகளிலும் அரசு பள்ளிகளில் படித்திருத்தல் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

English summary
ISRO Young Scientist Programme 2024 registrations will be started from February 20 at the official website of ISRO. Check eligibility, how to apply, and other details

Read More: விண்ணில் பாய்கிறது இன்சாட் – 3DS செயற்கைக்கோள்..!! இன்று கவுண்டவுன் தொடக்கம்..!! இது என்ன செய்யும் தெரியுமா..?

Tags :
Advertisement