இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தம் எதிரொலி!. ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பினர்!
Israel-Hezbollah: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தாயகம் திரும்பினர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 14 மாதங்களாக நடந்து வந்த போரின் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது உலக நாடுகள் அனைத்துக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. ‘இஸ்ரேல் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது, இஸ்ரேல் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சென்றுவிட வேண்டும்’ என்பது ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவினருக்கான நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 60 நாட்களுக்குள் இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் நடைபெறும் சண்டை பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், அடுத்து அங்கும் சண்டை முடிவுக்கு வரும் என்று உலகம் முழுவதிலும் உள்ள நல்லெண்ணம் படைத்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் சண்டையில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இவை அனைத்தும் முடிவுக்கு வருவது நிம்மதி அளிக்கும் விஷமாக அமைந்துள்ளது.
போரின்போது வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் அவர்கள் முன்பிருந்த பகுதிக்கு திரும்பக் கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தெற்கு லெபனானில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அவரவர் தாயகம் திரும்பினர். இதனால் பெய்ரூட் செல்லும் போது இருந்ததைப் போலவே தெற்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பல மாதங்களாக தீவிரமடைந்த பிராந்திய மோதலில் போர்நிறுத்தம் "நம்பிக்கையின் முதல் கதிர்" என்று கூறினார். "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் அதை முழுமையாக மதிக்க வேண்டியது அவசியம்," என்று அவர் கூறினார். சண்டையால் இடம்பெயர்ந்த 1.2 மில்லியன் லெபனான் குடிமக்களுக்கும், எல்லையை ஒட்டிய தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுக்கும் இந்த போர்நிறுத்தம் நிவாரணம் அளித்தது.
லெபனான் போர்நிறுத்த விதிமுறைகளின் கீழ், 60-நாள் போர்நிறுத்தத்தின் போது இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து முழுவதுமாக வெளியேறும், அதே நேரத்தில் ஹெஸ்பொல்லா தனது கனரக ஆயுதங்களை லிட்டானி ஆற்றின் வடக்கே, இஸ்ரேலின் எல்லைக்கு வடக்கே சுமார் 16 மைல் (25 கிமீ) தொலைவில் நகர்த்தும். இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் வசிப்பவர்களை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை லிட்டானி ஆற்றின் தெற்கே நகர்த்த வேண்டாம் என்று எச்சரித்தது, இஸ்ரேலியப் படைகள் இன்னும் அந்தப் பகுதியில் இருப்பதாகவும், தொடர்ந்து பயணம் செய்பவர்களுடன் அவர்கள் "உறுதியாக" கையாள்வார்கள் என்றும் குறிப்பிட்டது.
Readmore: வெளிநாடுகள் செல்வோருக்கு எச்சரிக்கை!. 17 நாடுகளில் பரவிய கொடிய வைரஸ்!. அறிகுறிகள் இதோ!