For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காசாவில் பதற்றம்.!! 'Al-Jazeera' செய்தி நிறுவனத்தை தடை செய்த இஸ்ரேல்.!! பரபரப்பான அறிக்கை வெளியீடு.!!

05:57 PM May 06, 2024 IST | Mohisha
காசாவில் பதற்றம்     al jazeera  செய்தி நிறுவனத்தை தடை செய்த இஸ்ரேல்    பரபரப்பான அறிக்கை வெளியீடு
Advertisement

Al-Jazeera: கத்தார் நாட்டிற்கு சொந்தமான தொலைக்காட்சி அல் ஜசீராவின் உள்ளூர் நடவடிக்கைகளை மூட இஸ்ரேல் அரசாங்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அலுவலகமாக பயன்படுத்திய ஜெருசலேம் ஹோட்டலின் அறையை பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்ததாக இஸ்ரேலிய அதிகாரியும், அல் ஜசீரா செய்தி நிறுவனமும் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை, காஸாவில் போர் தொடரும் வரை அல் ஜசீரா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி செய்தி நிறுவனத்தின் நெட்வொர்க்கை மூடியது. இதனைத் தொடர்ந்து அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்த கிழக்கு ஜெருசலத்தில் உள்ள ஹோட்டல் அறையில் பொருத்தப்பட்ட கேமராக்களை சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

அல் ஜசீரா(Al-Jazeera) மீதான நடவடிக்கை ஒரு குற்றச் செயல் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் ஜசீரா செய்தி நெட்வொர்க் இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமான பொய் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியது என்றும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது.

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை அல் ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அல் ஜசீரா செய்தி நிறுவனம் இஸ்ரேலில் மூடப்படுவது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை இஸ்ரேல் அரசாங்கம் ஒருமனதாக வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்த இஸ்ரேலின் தகவல் தொடர்பு மந்திரி உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. அல் ஜசீரா இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் முயற்சி செய்யலாம் என செய்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அல் ஜசீராவின் அலுவலகங்களை மூடுவது, ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்வது, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களில் இருந்து சேனலை துண்டிப்பது மற்றும் அதன் இணையதளங்களை முடக்குவது ஆகியவை இந்த நடவடிக்கையில் அடங்கும். அல் ஜசீராவின் காசா நடவடிக்கைகள் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இஸ்ரேலிய செயற்கைக்கோள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி வழங்குநர்கள் அல் ஜசீரா ஒளிபரப்பை நிறுத்தினர்.

அல் ஜசீரா செய்தி நிறுவனம் இஸ்ரேலில் தடை செய்யப்பட்டது தொடர்பாக கத்தார் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வெளியாகவில்லை. காசா போர் தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியின் வாயை மூட இஸ்ரேல் முயற்சிப்பதாக கடந்த மாதம் வந்த நிறுவனம் கார் தெரிவித்திருந்தது. போரின் போது சமர் அபு டக்கா மற்றும் ஹம்சா அல் தஹ்தூஹ் உட்பட பல பத்திரிகையாளர்களை இஸ்ரேல் வேண்டுமென்றே குறிவைத்து கொன்றது என அல் ஜசீரா குற்றம் சாட்டியது. ஆனால் பத்திரிகையாளர்கள் யாரையும் கொலை செய்யவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது.

கத்தார் நாடு 1996 இல் அல் ஜசீரா தொலைக்காட்சியை நிறுவியது. உலக அளவில் தங்களை பிரகடனப்படுத்துவதற்கு இதை ஒரு வழியாக கருதியது. மனித உரிமைகள் மற்றும் தகவல்களை அனுப்புவதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் குற்ற செயல் என அல் ஜசீரா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் உலகளாவிய தங்களது பார்வையாளர்களுக்கு செய்தி மற்றும் தகவல்களை தொடர்ந்து வழங்குவதற்கான அதன் உரிமையை உறுதிப்படுத்துகிறது என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது

Read More: Pok | “பாகிஸ்தான் வளையல் அணிவில்லை; அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது..” ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை.!!

Advertisement