இஸ்ரேல் தாக்குதல்!. இறந்த தாயின் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை!. காசாவில் நெகிழ்ச்சி!.
Gaza: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலி பலத்த காயமடைந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் இறந்ததையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் வெளியே எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கெய்ரோவில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணும் நிலையில், சனிக்கிழமை வரை மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம்களைத் தாக்கிய மூன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். Nuseirat அகதிகள் முகாம் மற்றும் Bureij அகதிகள் முகாமில் இறந்தவர்களில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை மாலை நுசிராட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன கர்ப்பிணி ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து வடக்கு காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டார். சில மணி நேரம் கழித்து, கர்ப்பிணி உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனை செய்தனர். அதில், அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கு இதய துடிப்பு இருந்ததையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர், அந்த கர்ப்பிணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.