முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இஸ்ரேல் அட்டாக்..!! காஸாவில் இதுவரை 33,000 பேர் உயிரிழப்பு..!! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!

05:13 PM Apr 04, 2024 IST | Chella
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Advertisement

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் - காஸா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெற்கு காஸா நகரான ராபாவில் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் கூறுகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 33,037 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், 75,668 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Read More : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Advertisement
Next Article