For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிரியாவின் பண்டைய நகரத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!! 36 பேர் கொலை, 50 பேர் காயம்..!!

An Israeli airstrike targeting the ancient Syrian city of Palmyra killed 36 people.
08:54 AM Nov 21, 2024 IST | Chella
சிரியாவின் பண்டைய நகரத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்     36 பேர் கொலை  50 பேர் காயம்
Advertisement

சிரியாவின் பண்டைய நகரமான பல்மைராவை குறிவைத்து இஸ்ரேலியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். நகரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் தொழில்துறை மண்டலத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மாநில செய்தி நிறுவனமான SANA தெரிவித்துள்ளது.

Advertisement

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் குழுவினர் கடந்தாண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

அதேவேளை, கடந்த ஆண்டு ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல் காசா மீதான கொடிய தாக்குதலைத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 44,000 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதில், 1,04,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More : TNPSC குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம்..!! இன்றே கடைசி நாள்..!! தேர்வர்களே மறந்துறாதீங்க..!!

Tags :
Advertisement