உலகில் இப்படியொரு மர்ம இடமா?. ஈர்ப்பு விசையே இல்லையாம்!. சுவரில் நாற்காலி வைத்து அமரும் மக்கள்!. எதிர் திசையில் பாயும் நீர்!
America: உலகில் பசுமை போர்த்திய மலை, பரந்து விரிந்த வானம், வற்றாத மகா சமுத்திரங்கள், பாய்ந்தோடும் ஆறுகள், பனி மலைகள், எரிமலைகள் என கண்ணெதிரே நாம் பார்க்கும் இயற்கையின் அதிசயங்கள் வெகு குறைவு. நம் கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்களை தன்னிடத்தில் வைத்திருக்கிறது இயற்கை. ஆங்கிலேயே இயற்பியல் விஞ்ஞானி கடந்த 17ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக புவி ஈர்ப்பு சக்தியை கண்டறிந்தார்.
அதன் அடிப்படையில், இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களுமே புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டது என்று கருதப்படுகிறது. புரியும்படி சொன்னால், நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்தவகையில், அமெரிக்காவின் காஸ்மோஸ் மிஸ்டரி ஏரியா, ரேபிட் சிட்டி டி ஹிஸ் என்பது அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மர்மப்பகுதியில் ஒரு பக்கமாக வளைந்திருக்கும் விசித்திரமான மரங்கள் உள்ளன. இங்கு ஒற்றை காலில் நிற்கலாம். கீழே விழமாட்டீர்கள். இங்குள்ள ஏரிகள் நீரின் சரிவுக்கு எதிர் திசையில் பாய்வது போல் காணப்படும்.
இதேபோல், அமெரிக்காவின் மிச்சிகனில் செயின்ட் இக்னாஸ் என்ற மர்ம இடத்திலும் ஈர்ப்பு விசை மிகக் குறைவு. இதனால் இங்கு பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது, மக்கள் சுவரில் 90 டிகிரி கோணத்தில் நின்று நாற்காலியை வைத்து அமர்ந்திருக்கிறார்கள். இங்கு எந்த ஒரு நபரின் சமநிலையும் அசாதாரணமாகிறது.
அமெரிக்காவின், அரிசோனா மற்றும் நெவாடா மாநில எல்லையில் அமைந்துள்ள ஹூவர் அணை, கொலராடோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.இந்த அணையின் கரையோரத்தில் தண்ணீர் கீழே நோக்கி செல்வதற்கு பதிலாக மேல் நோக்கி செல்கிறது. இது குறைந்த புவியீர்ப்பு விசையினால் ஏற்படவில்லை என்றும் அணையின் மேல் உள்ள அதிக நீர் அழுத்தம் காரணமாக புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நீர் ஓட்டத்தை மேல் நோக்கி தள்ளும் சக்தியை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.