For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

04:35 PM Apr 08, 2024 IST | Chella
உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா    எப்படி தெரிந்து கொள்வது
Advertisement

இன்றைய உலகில் எந்தவித உடல்நலப் பிரச்சனைகளும் இல்லாத இள வயது நபர்கள் கூட திடீரென்று மாரடைப்பால் இறந்து போகும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். நடனம் ஆடிக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ திடீரென்று மயங்கி விழுந்து இறக்கும் நபர்களின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1.79 கோடி மக்கள் இதய நோய்களால் இறக்கின்றனர். இதில் 80-90 சதவிகித நோயாளிகள் மாரடைப்பு வந்த பிறகே மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இந்தியாவிலும் பலருக்கும் இதயத்தில் 40-50 சதவிகித அடைப்புகள் இருந்தும், அதற்கு ஒழுங்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் மாரடைப்பினால் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

Advertisement

இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

* ரத்த அழுத்தம் 120/80 mmHg-க்கும் குறைவாக இயல்பான அளவில் இருக்க வேண்டும்.

* ஆண்களுக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 mg/dL-க்கு குறைவாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு 40 mg/dL-க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

* பெண்களாக இருந்தால் நல்ல கொலஸ்ட்ரால் அளவு 50 mg/dL-க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

* ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிப்புகள் இருந்தால் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.

* உடல் நிறை குறியீடு (BMI) 18.5 மற்றும் 24.9 என்ற அளவில் இருக்க வேண்டும்.

* வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரொட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

* ரத்த சர்க்கரை அளவு விரதத்திற்குப் பின் 100 mg/dL என்ற அளவில் இருக்க வேண்டும்.

* சிகரெட், புகையிலை போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

* குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக இருப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருப்பதும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.

* உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது இதய சம்மந்தமான பிரச்சனை வந்துள்ளதா? என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு ஏதும் ஆபத்து உள்ளதா? என்பதை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

* உங்களுக்கு இதய சம்மந்தமான பிரச்சனை ஏற்கனவே இருக்கிறதா அல்லது டயாபடீஸ், ஹைபர் டென்சன், குடும்ப வரலாறு, புகைபிடித்தல், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை போன்ற இதயப் பிரச்சனைகளை வரவழைக்கக் கூடிய பழக்கங்கள் உங்களுக்கு இருக்கிறதா? என்பதன் மூலமும் ரத்த பரிசோதனை மற்றும் ECG, ECHO, TMT பரிசோதனை மூலமும் உங்களுக்கு மாரடைப்பு வரும் ஆபத்து இருக்கிறதா என்பதை உங்கள் மருத்துவர் கூறுவார்.

* இதுதவிர கொரோனா வைரஸ் இதய அமைப்பை நேரடியாக தாக்குவதால், கொரோனா தொற்றுக்கு பிறகு பல இளைஞர்களிடம் இதய சம்மந்தமான பிரச்சனை அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. ஆகையால், இன்றைய சூழ்நிலையில் புகைப்பழக்கத்தை தவிர்த்து, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றி வருவதன் மூலம் நம் இதயத்தை ஆரோக்கியமக வைத்துக்கொள்ள முடியும்.

Read More : விவசாயிகளே..!! ரூ.2,000 எப்போது உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் தெரியுமா..? வெளியான குட் நியூஸ்..!!

Advertisement