முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’விஜய் மணிப்பூர் வர தயாரா’..? ’பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்’..!! வெச்சி செய்த அண்ணாமலை..!!

BJP leader Annamalai has said that Vijay should develop basic general knowledge in politics.
01:40 PM Dec 09, 2024 IST | Chella
Advertisement

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “அம்பேத்கருடைய புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் உங்களுக்கு ஆளே கிடைக்கவில்லையா..? தமிழ்நாட்டில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவை புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைத்தது ஏன்?.

Advertisement

ஆன்ந்த் டெல்டும்டே நகர்ப்புற நக்சலை சேர்ந்த முக்கிய குற்றவாளி. தமிழ்நாட்டிற்கு நக்சல்களைக் கொண்டு வந்து விடலாம் என திட்டமிடுகிறார்களா? என தெரியவில்லை. விசிக யார் கையில் உள்ளது..? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்? நடிகராக இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார், அவருக்கு அரசியலின் அடிப்படை புரிதல் தேவை.

அரசியலில் அடிப்படை பொது அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும். விஜய் பேசியதில் எந்த தவறும் கிடையாது. விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருடன் மணிப்பூர் சென்று அங்குள்ள கள நிலவரத்தை எடுத்துரைக்க தயார். மணிப்பூர் பற்றி விமர்சிப்பவர்களை அங்கு அழைத்துச் செல்ல தயார். மணிப்பூரில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

Read More : BREAKING | திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம்..!! திருமாவளவன் அதிரடி உத்தரவு..!!

Tags :
annamalaitvk vijayvijay
Advertisement
Next Article