அதிகமாக செல்போன் பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்படுமா.? மருத்துவர்களின் கருத்து.!
தற்போதைய நவீன காலத்தில் செல்போன் இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்வில் நீங்க முடியாத ஒரு அங்கமாக செல்போன் மற்றும் அதன் பயன்பாடு மாறிவிட்டது. இந்நிலையில் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டின் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டி போன்றவை போன்ற வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்கும் மூளைக்கட்டி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூளையின் செல்களில் ஏற்படும் அதிகப்படியான வளர்ச்சியின் காரணமாக மூளையில் கட்டிகள் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பால் ஒரு ஆண்டிற்கு 28 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்படுவதாக இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆஃப் கேன்சர் ரிஜிஸ்டர் என்ற நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது . மேலும் மூளை கட்டி பாதிப்பினால் ஒரு ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் தாக்குதலுக்கு 20% குழந்தைகளும் பலியாகின்றனர். இடைவிடாத தலைவலி மருந்து எடுத்துக் கொண்டாலும் தீராத தலைவலி நினைவாற்றல் இழப்பு மங்கலான கண் பார்வை வாந்தி குமட்டல் காதில் ஏற்படும் இரைச்சல் மயக்கம் போன்றவை மூளைக்கட்டியை ஆரம்பத்தில் அறிந்து கொள்வதற்குரிய அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடல் பலகீனம் சோர்வு ஆகியவை ஏற்பட்டாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டினால் மூலையில் கட்டி ஏற்படுமா.? என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அதிகப்படியான செல்போன் உபயோகத்திற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். எனினும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. எனினும் செல்போன் பயன்பாடு என்பது உடலின் மற்ற ஆரோக்கியங்களுக்கும் கேடு விளைவிக்க கூடிய ஒன்று. எனவே அதனை கூடுமானவரை தவிர்ப்பது நலம் பயக்கும்.