முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நடோடிகள்’ படத்தில் நடித்த துணை நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

The current photos of the supporting actress who played the lead role in Nadodithi are going viral on the internet.
05:13 PM Sep 24, 2024 IST | Chella
Advertisement

நாடோடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நாடோடிகள் திரைப்படத்திற்கு எப்போதுமே தனி இடமுண்டு. சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, பரணி, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக சக நண்பர்கள் படும் சிரமத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் காதல் ஜோடியாக சரவணன், பிரபா என்ற கதாபாத்திரம் இருக்கும். பிரபா கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சாந்தி தேவி. இப்படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் இவரது முகம் நினைவில் இருக்கும்.

அந்த அளவிற்கு நாடோடிகள் படம் இவரை பிரபபலமடைய செய்திருக்கிறது. ஆனால், நாடோடிகள் படத்திற்கு பிறகு இவரை பெரியளவில் எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடிவதில்லை. கடந்த 2012இல் வெளியான ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்ற படத்தில் நடித்திருந்த இவர், தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில், நாடோடிகள் படத்திற்கு பிறகு சாந்தி தேவி என்ன ஆனார்? எப்படி உள்ளார் என எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : படுத்துக் கொண்டே இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் வருமாம்..!!

Tags :
சினிமாநடிகை சாந்தி தேவிநாடோடிகள்
Advertisement
Next Article