முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Have you ever wondered why airplanes are white in color?
01:08 PM Oct 15, 2024 IST | Chella
Advertisement

நீங்கள் விமானத்தை பலமுறை பார்த்திருப்பீர்கள். ஏன் அதில் அமர்ந்து பயணமும் செய்திருப்பீர்கள். ஆனால், ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்பதை ஒருபோதும் யோசித்திருக்க மாட்டீர்கள். வானில் பறக்கும் இந்த விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு காரணம் இருக்கிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவான வெப்பத்தை உள் வாங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், வெள்ளை நிறம் விமானத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வெள்ளை நிறமானது காற்றில் பறக்கும் எரிபொருளின் வெப்பத்தால் ஏற்படும் விபத்துகளின் வாய்ப்பைக் குறைக்கிறது. இது தவிர, விமானத்தை பல வகையான விபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அது இயந்திரக் குழுவிற்கு மிக விரைவாக தெரிந்துவிடும். எனவே உடனடியாக சீரமைக்கப்பட்டு விபத்துகள் தவர்க்கப்படுகிறது.

விமானத்தின் வெள்ளை நிறத்தால் விமான தயாரிப்பாளர்களும் பயனடைகிறார்கள் என்றே கூறலாம். வெள்ளை நிறமானது வெயிலில் சீக்கிரம் மங்காத தன்மை கொண்டது. எனவே, விமானத்தின் நிறமும் மங்காது. மற்ற நிறங்கள் என்றால் சூரியனுக்கு அருகில் செல்லும்போது விரைவாக நிறம் மங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. அதனால் விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வர்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

நிறுவனத்திற்கு ஒரு முறை விமானத்தை வண்ணமயமாக்குவதற்கு சுமார் ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வெள்ளை நிறத்தால், நிறுவனங்கள் பணத்தை செலவழிப்பதில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இது தவிர, வெள்ளை நிறம் காரணமாக, விமானம் விற்கப்படும் போது, ​​அதன் பெயரை எளிதாக மாற்றவும் முடியும். இதனால் தான் விமானத்தின் நிறம் வெள்ளையாக இருக்கிறது.

Read More : இரவில் பிரா அணிந்து தூங்குவதால் மார்பக புற்றுநோய் வருமா..? பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
குறைந்த வெப்பம்பாதுகாப்புபெயிண்ட்வர்ணம்விமானங்கள்
Advertisement
Next Article