பாத்ரூமில் நீண்ட நேரம் செலவிடுவதற்கு இப்படி ஒரு காரணமா..? ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
பொதுவாக நாம் பாத்ரூமை குளிப்பதற்கு, துவைப்பதற்கு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தும் போது, பல நபர்கள் தற்போது இதனை கடினமான நேரங்களில் ஒரு சொர்க்கம் போல பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களுடைய அன்றாட சரும பராமரிப்பு வழக்கம், கஷ்டமான சூழ்நிலைகளில் அழுவதற்கு, பிடித்தமான பாடல்களை பாடுவது ஆகியவற்றிற்கும் பலர் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.
அதாவது உண்மை என்னவென்றால், அந்த இடத்தில் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். யாருக்காகவும் நடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதன் காரணமாக பலர் பாத்ரூமில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதற்குப் பின்னணியில் ஒரு பொதுவான வித்தியாசமான காரணம் ஒன்று உண்டு. குறிப்பாக, தற்போது இளைஞர்கள் பாத்ரூமில் அதிக நேரத்தை செலவிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பங்கேற்ற 2,000 நபர்களில் 43 சதவீதம் நபர்கள் பாத்ரூமில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மன அமைதியோடு இருப்பதை விரும்புகின்றனர்.
13 சதவீதமான நபர்கள் தங்களுடைய துணையிடம் இருந்து விலகி இருப்பதால், பாத்ரூமில் நேரம் செலவழிப்பதை மகிழ்ச்சியாக கருதுகின்றனர். இந்த ஆய்வின்படி, ஒரு சராசரி பிரிட்டிஷ் நபர் ஒரு வாரத்தில் கழிப்பறையை ஒரு மணி நேரம் மற்றும் 54 நிமிடங்கள் அல்லது ஒரு மாதத்தில் ஒரு வேலை நாள் என்ற கணக்கில் பயன்படுத்துகிறார். பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிக அளவு நேரத்தை கழிப்பறையில் செலவிடுகின்றனர். அதன்படி, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் அல்லது சராசரியாக ஒரு வாரத்திற்கு 2 மணி நேரம் செலவிடுகின்றனர். இதுவே பெண்கள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக அல்லது ஒரு வாரத்திற்கு 1 மணி நேரம் மற்றும் 42 நிமிடங்களை செலவு செய்கின்றனர்.
கழிப்பறையில் நீண்ட நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மன நலனில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு சில நபர்களுக்கு இது தெரியாவிட்டாலும் கூட, ஒரு விதமான ரிலாக்ஸேஷனுக்காக அவர்கள் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். வாழ்க்கை கடினமான நேரங்களை அளிக்கும்போது, நமக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. அந்த பிரேக்கிற்கு பலர் கூடுதலாக டாய்லெட் பிரேக் எடுத்துக் கொள்வது சமூக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.