மருத்துவ காப்பீடு திட்டத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா..? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..!!
ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். வேண்டுமென்றால், நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 2 மருத்துவ காப்பீடுகளையும் ஒரே நேரத்தில் க்ளைம் செய்யக்கூடாது. இப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு மருத்துவ செலவிற்காக ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது என்றால், உங்கள் அலுவலகத்தில் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். முதலில் நீங்கள் அலுவலகத்தில் கொடுத்த மருத்துவ காப்பீடை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு கூடுதல் தேவைக்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் போட்டுக் கொண்ட மருத்துவ காப்பீட்டை பயன்படுத்தலாம்.
ஆனால் மருத்துவமனைகளில் ஒரு மருத்துவ காப்பீட்டை மட்டுமே கிளைம் செய்ய அனுமதி இருக்கிறது. ஒருவேளை உங்களுடைய மருத்துவ செலவு காப்பீட்டை மீறி செல்லும் போது மருத்துவமனை வழங்கிய பில்களை நகலெடுத்து அட்டஸ்டெட் வாங்கி 2 மருத்துவ காப்பீடுகளையும் மருத்துவ காப்பீடு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த நிறுவனம் உங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மருத்துவ காப்பீட்டுக்காக 2ஆம் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி அனுப்பும். அதன் பிறகு, இரண்டாம் காப்பீடு தொகையை நீங்கள் தாமதமின்றி பெற்றுக் கொள்ளலாம். எப்போதுமே அலுவலகம் உங்களுக்கு வழங்கிய மருத்துவ காப்பீட்டை தான் முதலில் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த மருத்துவ காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Read More : நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு..!! சிக்கியது யார் தெரியுமா..? மனைவி பரபரப்பு புகார்..!!