மக்களே இது ரொம்ப ஆபத்து..? தூங்கும் போது இதை செய்றீங்களா..? தடுப்பது எப்படி..?
நம்முடைய ஒட்டு மொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தூக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நம்முடைய உடல் மற்றும் மனதை உற்சாகமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க தினசரி போதுமான நேரம் இரவு தூக்கம் அவசியமாகும். அதே நேரம் தூக்கம் சார்ந்த பல தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் தூக்கம் பற்றிய சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை இங்கே பார்க்கலாம்.
கட்டுக்கதை
வார நாட்களில் தூங்காமல் விட்ட நேரத்தை வார இறுதியில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
உண்மை:
அனைவருக்குமே தினசரி போதுமான இரவு தூக்கம் தேவை. பல்வேறு காரணங்களால் வார நாட்களின் இரவு பொழுதில் சரியாக தூங்காமல் இருந்து விட்டு, அந்த மணி நேரங்களை அட்ஜஸ்ட் செய்ய வார இறுதியில் மொத்தமாக தூங்கலாம் என்பது கட்டுக்கதையே. எனவே, தினசரி நிலையான மற்றும் போதுமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். வார இறுதியில் அதிக நேரம் தூங்குவது என்பது எப்போதாவது உடலை ரெஃப்ரஷ் செய்ய உதவும் என்றாலும் நாள்பட்ட தூக்கமின்மை ஒட்டுமொத்தமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கட்டுக்கதை
தூக்கத்தின் போது குறட்டை விடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.
உண்மை:
லேசான சத்தத்துடன் மற்றும் தூக்கத்தின் இடையில் அடிக்கடி விடும் குறட்டை பற்றி கவலை கொள்ள வேண்டாம். ஆனால், மிகவும் சத்தமாக மற்றும் அடிக்கடி விடப்படும் குறட்டை சில சுகாதார நிலைகள் இருப்பதை வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறியாகும். தீவிர குறட்டையானது தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலாக குறிப்பிடப்படும் sleep apnea-வின் அறிகுறியாக இருக்கலாம். இது தூங்கும் போது சுவாசம் தடைபடும் ஒரு தூக்க கோளாறு ஆகும்.
கட்டுக்கதை
பகலில் தூக்கம் வருவது எப்பொழுதும் போதுமான அளவு தூங்காததை மட்டுமே குறிக்கிறது.
உண்மை:
இரவு போதுமான அளவு தூங்கி இருந்தாலும், பகல் நேரத்தில் அதிக தூக்கம் தொடர்ந்து வர கூடும். ஏனென்றால், இந்த வகையான சோர்வு மற்ற சில மருத்துவ பிரச்சனைகள், தூக்க கோளாறுகள் அல்லது தரம் மோசமான (poor-quality) தூக்கம் மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவற்றின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
கட்டுக்கதை
ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதே முக்கியம்.
உண்மை:
நீங்கள் உங்கள் தூக்கத்தை நிம்மதியாக தடையின்றி எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதற்கான நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. ResMed Sleep Survey 2024 கருத்து கணிப்பின்படி, 27% இந்தியர்கள் மட்டுமே வாரத்தின் ஒவ்வொரு நாளும் தரமான தூக்கம் மற்றும் நல்ல தூக்க நேரம் இரண்டிலும் திருப்தியை பதிவு செய்துள்ளனர். தூங்கும் போது அடிக்கடி விழிப்பது தூக்கத்தின் தரத்தை கணிசமாக பாதிக்கிறது. எனவே, தூக்கத்தினால் கிடைக்கும் முழு பலன்களையும் பெற தினசரி இரவு போதுமான மற்றும் தடையற்ற தூக்கம் நம் அனைவரின் இலக்காக இருக்க வேண்டும்.
Read More : வங்கதேச அரசியலில் திடீர் திருப்பம்..!! சிறையில் இருந்து வெளிவருகிறார் முன்னாள் பிரதமர்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!