காய்ச்சி குடிக்கும் பாலில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! எல்லாம் அழிந்துவிடும்..!!
பாக்கெட் பால் அல்லது பசுவிடமிருந்து நேரடியாக கறக்கப்படும் பால் என அனைத்தையும் காய்ச்சாமல் குடிப்பது நல்லது இல்லை. பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பாலை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். பாலை சரியாக காய்ச்சி குடிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
எந்த ஒரு உணவையும் அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி செய்தால் அந்த ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. எனவே, பால் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதால் பால் குடிப்பதால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது. எனவே, பாலை அதிக சூட்டில் காய்ச்சினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பாலை விரைவில் கொதிக்க வைப்பதால், அதன் இயற்கை சர்க்கரை சத்து விரைவில் குறைந்து விடும். இதில் உள்ள கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாலில் இருந்து பிரிய தொடங்கும். பாலை அதிக வெப்பத்தில் கொதிக்க வைத்தால் பாத்திரங்கள் விரைவாக அடிப்பிடித்து விடும். பாலை சீக்கிரம் சூடுபடுத்தினால், பாலின் நிறத்திலும் சுவையிலும் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
இதனால் பாலை குறைந்த அளவு மிதமான தீயில் தான் காய்ச்ச வேண்டும். இதனால் பாலில் உள்ள நீர், ஆவி ஆகாது. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் அழிக்கப்படாது என்று கூறுகிறார்கள் மருத்துவர் நிபுணர்கள். ஆகையால் பாலை எப்போதும் மிதமான தீயில் சூடு படுத்துவதே நல்லது.
Read More : இனி உங்கள் வீட்டு செடிகளில் இருக்கும் பூச்சிகளை ஈசியாக விரட்டலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!