தம்மா துண்டு தாமரை விதையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
ஃபாக்ஸ் நட்ஸ் என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் என்பது தாமரை பூவிலிருந்து கிடைக்கிறது. இந்த விதைகளை பாரம்பரியமான மருத்துவ மற்றும் சமையல் ஆகிய இரண்டிலும் ஆசிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
தாமரை விதைகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த தாமரை விதைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன இவற்றை யாரெல்லாம் சாப்பிடலாமா இவற்றை எப்படி சப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாமரை விதைகளில் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் ஆகியவை உள்ளன. இது மட்டுமின்றி பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் இ, வைட்டமின் கே ஆகியவையும் இதில் உள்ளது.
மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள் தாமரை விதைகளை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் நம் உடலுக்கு மிகுதியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்ற அதே நேரத்தில் இது குறைவான கலோரிகளை கொண்டதாக இருக்கிறது. செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வாக தாமரை விதைகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலமிலக்கியாகவும் செயல்படுகிறது.
நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தாமரை விதைகளுக்கு உண்டு. அது மட்டுமில்லாமல் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நம் உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆகவே இதய ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது.மேலும் குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுப் பொருளாக தாமரை விதைகள் இருக்கின்றன. இதனை நாம் எடுத்துக் கொள்வதால் நம் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக உயர்ந்து விடாது. அந்த வகையில் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இது உதவுகிறது.
Read More: ‘பரோட்டா மாஸ்டர் ஆவதற்கு கோச்சிங் கிளாஸ்..!’அட நம்ம மதுரைல தாங்க!