ரூ.6000 வழங்கும் PM கிசான் திட்டத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கா...? நாளை நடக்கும் சிறப்பு முகாம்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ. தாங்களாகவே ஆதார் எண்ணை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம். பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயனடைய வேண்டும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து முதன்மை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் ரொக்கமாக பணம் செலுத்தி இடுபொருள் பெறுவதற்கு பதிலாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கையடக்க மின்னணு இயந்திரங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரொக்கத் தொகை செலுத்தாமல் வங்கி அட்டைகள் மற்றும் க்யூ.ஆர் கோடு மூலம் மின்னணு பண பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் ஏடிஎம் அட்டை, ரிசர்வ் வங்கி அனுமதித்த மின்னணு பண பரிமாற்ற முறைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.