மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலா..? இனி கூண்டோடு சஸ்பெண்ட்..!! தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை..!!
டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூலித்தால் ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு தவறு கண்டறியப்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இருப்பினும், அண்மை காலமாக டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் வகையில், இனி டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்கப்பட்டால், அங்குள்ள மேற்பார்வையாளர் உள்பட அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூலித்தால் ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read More : இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்..!! இனி யார் யாருக்கு ஏழரை சனி தொடங்குகிறது தெரியுமா..?