எங்கயும் தண்ணி நிக்கலயா..? வெட்கம் கெட்ட அமைச்சருங்க..!! யாராச்சும் அகப்பட்டீங்க..!! கடுமையாக விமர்சித்த கஸ்தூரி..!!
தெற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் – புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் சமயத்தில் தரை காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 கிமீ முதல் 55 கிமீ வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 440 கிமீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 460 கிமீ. கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டை பதம் பார்த்து வருகிறது. கோவை, மதுரை போன்ற மாவட்டங்கள் மழையில் சிக்கிய மீண்டது. அதற்குள் சென்னையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், விடாமல் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில், ”எங்க ஏரியா. இப்போ… வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது. முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான். எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க…. என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
Read More : கனமழையால் விடுமுறையில் இருக்கும் மாணவர்களின் கவனத்திற்கு..!! அமைச்சரின் இந்த உத்தரவை கவனிச்சீங்களா..?