For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புகை மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதா.? கவலை வேண்டாம்…" பசுமஞ்சளை இப்படி பயன்படுத்தி பாருங்க.!

05:53 AM Nov 26, 2023 IST | 1newsnationuser4
புகை மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதா   கவலை வேண்டாம்…  பசுமஞ்சளை இப்படி பயன்படுத்தி பாருங்க
Advertisement

மஞ்சள் பல வகை மருத்துவ பயன்களைக் கொண்டது. இது கிருமி நாசினி மற்றும் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. சருமத்தை பராமரிப்பதிலும் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவையெல்லாம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளின் பலன்கள். ஆனால் இந்த மஞ்சள் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் பசு மஞ்சள் பேஸ்ட் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. பசுமஞ்சள் பேஸ்ட் தயாரிப்பது எப்படி மற்றும் அவற்றின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

Advertisement

50 கிராம் மஞ்சள் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 5 பூண்டு பல் 2 ஸ்பூன் மிளகு மற்றும் 20 துளசி இலைகள் 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக மை போல அரைக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக அறைந்து வந்ததும் அதனை காற்று புகாத பாட்டில் ஒன்றில் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இதனை உணவிற்கு பின்னர் 10 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு வரவும். இந்த பசு மஞ்சள் பேஸ்டில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதனை தினமும் உணவிற்குப் பின் ஒரு வேளை சாப்பிட்டு வர நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

இந்த பேஸ்ட் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை ரத்தக்குழாய்களில் இருந்து நீக்க உதவுகிறது. மேலும் நமது ரத்த சுத்திகரிப்பை மேம்படுத்துவதோடு செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. இந்தப் பசுமஞ்சள் பேஸ்ட் உடலில் இருக்கும் கிருமிகளிடமிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. இந்த பேஸ்டில் மஞ்சளுடன் மிளகு சின்ன வெங்காயம் கலந்து இருப்பதால் இவை குர்குமினை உடல் வேகமாக உறிஞ்ச உதவுகின்றன. இதன் காரணமாக இன்ஃபிளமேசன் கட்டிகள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

இந்த பேஸ்டில் கலக்கப்பட்டு இருக்கும் அனைத்து பொருட்களும் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை. இந்த பசுமஞ்சள் பேஸ்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் புற்று நோய்க்கு எதிரான சக்தி உடலில் உருவாகும். அதனால் புற்றுநோய் கட்டிகள் வரும் அபாயமும் குறைகிறது. மேலும் மது மற்றும் புகைப்படக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் சரி செய்வதோடு அவற்றின் ஆரோக்கியம் மேம்படவும் துணை புரிகிறது. நாம் மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதை காய வைத்து அரைத்து பொடி செய்து பயன்படுத்துகிறோம். இதனால் மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் அளவு குறைவாக இருக்கும். எனவே அவற்றின் மருத்துவ பயன்களும் குறைகிறது. இதனால்தான் மருத்துவ பயன்களுக்காக பசுமஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

Tags :
Advertisement