For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்கள் வாங்கும் தங்க நகை உண்மையானதா..? போலியானதா..? இதை கவனிக்காம வாங்காதீங்க..!!

12:00 PM May 07, 2024 IST | Chella
நீங்கள் வாங்கும் தங்க நகை உண்மையானதா    போலியானதா    இதை கவனிக்காம வாங்காதீங்க
Advertisement

இந்தியாவில் எந்தவொரு விசேஷ நிகழ்ச்சி என்றாலும் தங்கம் இல்லாமல் அது முழுமை பெறாது. ஒவ்வொரு இந்திய திருமணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் தங்கம், அலங்கார நகையாகவும், சேமிப்பாகவும், முதலீடாகவும் திகழ்கிறது. பொதுவாக நாம் புதிதாக வாங்கும் தங்கத்தின் விலையை பற்றி யோசிப்போமே தவிர அதன் நம்பகத்தன்மை பற்றி நினைத்து பார்த்திருப்போமா? நாம் கடைகளில் வாங்கும் தங்க நகை உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

Advertisement

முதலில் ஹால்மார்க் இருக்கிறதா என பாருங்கள். புதிதாக தங்க நகை வாங்கும் போது, ஹால்மார்க் தரச்சன்றிதழ் பெற்றுள்ள நகையாக பார்த்து வாங்குங்கள். தங்கத்தின் தூய்மை மற்றும் உண்மைத்தன்மையை பிஐஎஸ் தரச்சான்றிதழ் நிர்ணயிக்கிறது. எல்லா தங்க நகையிலும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும் என 2021இல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஹால்மார்க் முத்திரையுள்ள தங்க நகையை மட்டுமே இந்திய நகைக்கடைகள் விற்பனை செய்ய முடியும்.

தங்கத்தை பரிசோதிக்க வேண்டும்

தங்கத்தின் உண்மைத்தன்மையை ஆசிட் டெஸ்ட், எலக்ட்ரானிக் கோல்ட் டெஸ்ட் மற்றும் ஸ்பெசிஃபிக் கிராவிட்டி டெஸ்ட் என 3 வழிகளில் பரிசோதிக்கலாம். ஆசிட் டெஸ்ட் முறையில் நைட்ரிக் ஆசிட் பயன்படுத்தி தங்கத்தில் வேறு ஏதாவது பொருள் கலக்கப்பட்டுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும். எலக்ட்ரானிக் டெஸ்ட் முறையில், மின்சார கடத்தும் திறன் மூலம் தங்கத்தின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளலாம். அடுத்ததாக ஸ்பெசிஃபிக் கிரேவிட்டி டெஸ்டில் தங்கத்தின் அடர்த்தியை வைத்து அதன் தூய்மைத்தன்மையை தெரிந்துகொள்ள முடியும்.

காந்த பரிசோதனை:

உங்கள் தங்க நகை அருகில் சக்திவாய்ந்த காந்தத்தை வைக்கும் போது என்ன நேர்கிறது என்பதை பார்க்க வேண்டும். தங்கத்தை ஒருபோதும் காந்தத்தால் ஈர்க்க முடியாது. ஒருவேளை உங்கள் தங்க நகை காந்தத்தை நோக்கி ஈர்த்தால், அதில் கலப்படம் இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் தங்க முலாம் பூசப்பட்ட உலோகங்கள் கூட காந்தத்தால் ஈர்க்க முடியாமல் போகும். ஆகையால் இந்த முறை 100 சதவிகிதம் உத்தரவாதம் தராது என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

தங்கத்தின் எடை மற்றும் அளவை கவனமாக பாருங்கள்:

தங்கத்தை பரிசோதிக்க இதுவொரு அடிப்படையான பரிசோதனை. நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டிய தங்கத்தை உங்கள் கையில் எடுத்து உண்மையான தங்கத்தோடு ஒப்பிட வேண்டும். தங்கத்தின் அளவு பெரிதாக இருந்தாலும் எடை குறைவாக இருந்தால் போலியான நகை என அர்த்தம். நீங்கள் நகை வியாபாரிகளின் கருவிகளான ஃபிஸ் டெஸ்டர் (Fisch Tester) மற்றும் காலிபரைக் கூட பயன்படுத்தி தங்கத்தை சோதித்து பார்க்கலாம்.

Read More : சாதாரண காய்ச்சல் vs டெங்கு காய்ச்சல்..!! எப்படி நீங்களே கண்டறிவது..? சிகிச்சைகள் என்ன..?

Advertisement