முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரசவ தேதி நெருங்கிவிட்டதா?. முன்கூட்டியே மருத்துவமனைக்கு போய்விடுங்கள்!. சுகாதாரத்துறை அறிவிப்பு!

Is the due date approaching? Get to the hospital early! Health department announcement due to the echo of monsoon rains!
05:40 AM Oct 17, 2024 IST | Kokila
Advertisement

Pregnant: பருவமழை முன்னெச்சரிக்கையாக பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதித்து, பிரசவம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், பிரசவ தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணித் தாய்மார்கள் கடந்த 15ம் தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் நேற்றும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள், கடைசிநேர காலதாமதத்தை தவிர்க்க முன்னதாகவே மருத்துவமனையில் சேர வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: தடுப்பூசிகள் மன இறுக்கத்தை ஏற்படுத்துமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

Tags :
health departmenthospitalMonsoonPregnant
Advertisement
Next Article