”என்னது அஜித் வெற்றிக்கு திராவிட மாடல் காரணமா”..? இங்க துப்ப முடியாது; வெளிய சென்று காரி துப்புறேன்..!! உதயநிதியை அட்டாக் செய்த அண்ணாமலை..!!
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தின் 24H சீரிஸில் நடிகர் அஜித்குமார் ரேசிங் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறை மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நாளை நடிகர் அஜித் F1 ரேஸில் துபாயில் டாய்லெட்டை பயன்படுத்தினால் கூட, உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்வார் என்றால், திராவிட மாடல் ஆட்சியால் தான் அஜித் துபாயில் டாய்லெட்டை பயன்படுத்துவதாக தெரிவிப்பார்.
இதனை நான் சொல்ல வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை எனக்கு. அந்த மனிதன் (நடிகர் அஜித்) எந்த ஒரு காட்பாதரும் இல்லாமல் சினிமாவில் நடித்து மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினை போல முட்டுக் கொடுப்பதற்கு ஒரு சந்தானமும், தயாரிப்பதற்கு பின்னாடி ஸ்டாலின் ஐயாவோ நடிகர் அஜித்துக்கு இருந்தார்களா? சந்தானத்தின் காமெடியை வைத்து தான் உதயநிதி படத்தை ஓட்டினார்கள்.
ஆனால், தனி மனிதனாக அஜித் உச்சத்தில் இருக்கும் போது பிரேக் எடுத்து, அவருடைய ஃபேஷனை பாலோ செய்கிறார். அதிலும் 3-வது இடத்தில் அவருடைய அணியை கொண்டு வந்துள்ளார். இதற்கு திராவிட மாடல் என்று சொன்னால்… என் முன்னே மைக் இருக்கிறது.. இங்கே நான் காரி துப்ப முடியாது. வெளியே சென்று காரி துப்புகிறேன்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.