ஈரான் அதிபரின் மரணம் கொலையா..? அடுத்து என்ன நடக்கும்..? கொண்டாடும் அமெரிக்கா, இஸ்ரேல்..?
* அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம் பற்றி விசாரணை குழு அமைக்கப்படும். இது விபத்தாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், இது கொலையாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரிய அரசியல் மோதலை ஏற்படுத்தும். கொலைக்கு காரணமானவர்கள் மீதான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும்.
* இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் வலுவான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கண்டிப்பாக கொண்டாடவே செய்யும். வெளியே இரங்கல் தெரிவித்தாலும் அமெரிக்கா, இஸ்ரேல் இதை கொண்டாடும். இந்த மரணத்தை பயன்படுத்தி ஈரானை முடக்க இஸ்ரேல், அமெரிக்கா முயற்சி செய்யும்.
* ஈரான் மீதான பொருளாதார தடை ஏற்கனவே உள்ளது. பொருளாதார ரீதியாக அந்த நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க அதிபர் ஒருவரே மரணம் அடைவது அந்நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும்.
* இஸ்ரேல் போருக்கு இடையே இது நடப்பதால் கண்டிப்பாக இஸ்ரேல் மீது சந்தேகம் எழும். இதற்கான விசாரணை மற்றும் பழிவாங்கும் வேலைகளை ஈரான் ஏற்கனவே எடுக்க தொடங்கி இருக்கும்.
* ஈரான் ஏற்கனவே சிரியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்று அரபு நாடுகளில் நடக்கும் போர்களில் கலந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இப்ராஹிம் மரணம் அங்கே உள்நாட்டு குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
* பாலஸ்தீன போரில் ஹிஸ்புல்லா படைக்கும், மற்ற பாலஸ்தீன படைகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது ஈரான். தற்போது அதிபரின் மரணம் காரணமாக இந்த போரில் பாலஸ்தீன ஆதரவு படைகளின் பலம் குறைய வாய்ப்புகள் உள்ளது.
Read More : நீங்க நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா..? வங்கி போட்ட அதிரடி உத்தரவு..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!