For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதிய சாப்பாடு முடிஞ்சுதா? வெறும் 5 நிமிடம் இதை பண்ணுங்க..!! இந்த பிரச்சனைகள் வரவே வராது.. 

Is lunch over? Do this in just 5 minutes..!! These problems will never come.
03:28 PM Dec 15, 2024 IST | Mari Thangam
மதிய சாப்பாடு முடிஞ்சுதா  வெறும் 5 நிமிடம் இதை பண்ணுங்க     இந்த பிரச்சனைகள் வரவே வராது   
Advertisement

மதிய உணவிற்கு பின்பான தூக்கம் அல்லது உணவு கோமா என அழைக்கப்படும் Postprandial somnolence, எல்லாருக்கும் இருக்கக்கூடியது. ஏன் இவ்வாறு மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. உணவிற்கு பின்பான நமது உடலின் ஆற்றல் அளவு, ஹார்மோன், ரத்த ஓட்டம், மூளைக்குச் செல்லும் கெமிக்கல்ஸ், சர்காடியம் ரிதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக கூட இவ்வாறு தூக்கம் வரலாம். அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் அல்லது கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் தூக்கம் வரும்.

Advertisement

ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு மிக சோர்வாக தூக்க கலக்கமாக உணர்பவர்களாக இருந்தால் கட்டாயம் இந்த சிறிய உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள். மதிய சாப்பாட்டிற்கு பிறகு உற்சாகமாக உணர்வீர்கள். இந்த மாதிரி சிறிய சிறிய உடற்பயிற்சிகளை எல்லாம் ஒவ்வொரு மதிய உணவிற்கு பிறகும் செய்தாலே போதும் உடலில் சேரும் சர்க்கரையை எரிக்க முடியும். இது மிகவும் எளிமையான உடற்பயிற்சி மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கூட இதனை செய்யலாம்.

தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு அரை மணி நேரம் இதுபோன்று உடலை அசைப்பது  இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சாப்பிட்ட பிறகு இப்படி செய்வது என்பது சற்று சிரமம் என்றாலும், வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட  உதவுகிறது.   இன்று பலருக்கும் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உடல் இயக்கங்கள் மிகவும் குறைவாக இருப்பது ஆகும்.

Read more ; சட்டப்பேரவையில் அதிமுக-வினர் பேசுவதை நேரலையில் காட்டுவதில்லை.. காரணம் ஆளும் கட்சிக்கு பயம்..!! – EPS

Tags :
Advertisement