ஆளுநரை மாற்றாதீர்கள்.. ஆர்.என்.ரவியால் திமுக மேலும் வளர்க்கிறது..!! - பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாதகவில் இருந்து அக்கட்சி உறுப்பினர்கள் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலை பரிசளித்தனர்.
சீமான் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த நா.த.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நா.த.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கட்சித் தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது. திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. நீங்கள் (சீமான்) தரக்குறைவாக பேசப் பேசத்தான் உங்களை விட்டு விலகுகிறார்கள். அவரால் திமுக வளர்கிறது.
அது போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு திமுகவை வளர்க்கிறது. என்றைக்காவது ஆளுநரை மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாமோ? அவரை மாற்ற வேண்டாம். அடுத்த முறையும் அவர் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேற வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும். எனவே இப்போது நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கோரிக்கை வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
Read more ; விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எஃப்-15..!! நேரில் பார்க்க வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..? தேதி, நேரம் என்ன..?