முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் கரு சிதைவு ஏற்படுமா..? - மருத்துவர் விளக்கம்

Is it true that eating papaya during pregnancy can cause miscarriage? - Doctor explanation
10:28 AM Dec 22, 2024 IST | Mari Thangam
Advertisement

பொதுவாக கர்ப்ப காலத்தில் சில வகை உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. அந்த கருத்துக்கள் உண்மையான ஒன்றா? பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பார்கள். இந்த இரண்டு பழங்கள் உடம்பிற்கு சூட்டை கொடுக்கும் பழங்கள் என்பதால் இந்த மாதிரியாக கூறுவதுண்டு. இதெல்லாம் உண்மையில் ஒரு கட்டுக்கதையா இல்லை இதற்கு பின்னால் எதாவது நியாயமான கருத்துக்கள் உள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் கூறிய தகவலகளை இந்த பதிவில் பார்க்கலாம்..

Advertisement

மருத்துவரின் விளக்கம் : கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண் பப்பாளி சாப்பிடலாம். ஆனால் பப்பாளி பழமாக இருக்க வேண்டும். பப்பாளி காயை சாப்பிடக்கூடாது. இது தசைப்பிடிப்பு வலியை ஏற்படுத்தும். பழுத்த பப்பாளியில் அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இருப்பதால், கர்ப்பிணிகள் பழுத்த பப்பாளியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் விளக்கினார். மேலும் பழுத்த பழம் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் தெரிவித்தார்.

பப்பாளி பழத்துக்கும் கருச்சிதைவுக்கும் என்ன தொடர்பு : நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசனில் வெளியிடப்பட்ட ஆய்வில் , பழுத்த பப்பாளியை சாப்பிட்ட கர்ப்பிணி எலிகளுக்கு தசை சுருக்கம் இல்லை. அதே நேரம் பப்பாளி பச்சையாக சாப்பிட்ட கர்ப்பிணி எலிகளுக்கு கருப்பை தசைப்பிடிப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பப்பாளி காயில் அதிக அளவு லேடெக்ஸ் இருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும். இது கருவுக்கு தீங்கு விளைவிக்கும். சஜாக் குழுவினர் நடத்திய உண்மை சோதனையில் பப்பாளி சாப்பிடுவ்து கருச்சிதைவு ஏற்படுத்தும் என்ற செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது.

​கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு எது : பழங்கள், காய்கறிகள் அல்லது நட்ஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை. ஏனெனில் அவற்றில் கால்சியம், புரதம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. கருச்சிதைவு ஏற்பட முக்கிய காரணம் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைவதாகும். எனவே அதை அதிகரிக்க நீங்கள் உங்கள் உணவில் மென்மையான தேங்காய், மாதுளை மற்றும் அத்திப்பழங்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

Read more ; ஆன்லைனில் பட்டா மாற்றம்.. தாசில்தார் ஆபிஸ்க்கு போக தேவையே இல்லை..!! இந்த செயலி போதும்..

Tags :
Papaya
Advertisement
Next Article