ரேஷன் கடை பாமாயில் மூலம் உணவு சமைப்பது ஆரோக்கியமா? மருத்துவர் சொல்லும் உண்மை இதோ..
நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. இயற்கைக்கு திரும்பும் நோக்கில் பலரும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களை பலரும் உபயோகிக்கத் தொடங்கி உள்ளனர். அதே வேளையில் ஏழைகள் முதல் கீழ்நடுத்தர வர்க்கம் வரை பயன்படுத்தும் எண்ணெய்களில் பாமாயில் தவிர்க்க முடியாதாதாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பிரபல பிஸ்கெட் நிறுவனங்கள் கூட அதன் தயாரிப்பில் பாமாயிலை பயன்படுத்துகின்றனர்.
பாமாயில் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பிரபல குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய போது “உலகளவில் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% பாமாயில் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் 92% நிறை கொழுப்பு உள்ளது. பாமாயிலில் 40 சதவீதம் நிறை கொழுப்பு உள்ளது.
கடலை எண்ணெய்யில் நிறை கொழுப்பு 20% உள்ளது. பாமாயில், கடலை எண்ணெய் இரண்டிலுமே மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் என்று அழைக்கப்படும் கொழுப்பு 40% உள்ளது. இதுதான் ஆரோக்கியமான கொழுப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு அதிகம் உள்ளதால் அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது.
ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இரண்டுமே சமமான அளவில் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்று எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். மக்கள் பயப்படும்படி பாமாயில் அந்த அளவுக்கு கெடுதல் கிடையாது. சுத்திகரிக்கப்பட்டு பாமாயில் வருகிறது. அப்படி செய்யும் போது சில கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
பாமாயில் ஆரோக்கிய நன்மைகள் :
1.பாமாயிலில் வைட்டமின் ஈ-ஆனது tocotrienols என்ற வடிவில் உள்ளது, இது மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உகவும் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பண்புகளைக் கொண்டுள்ளது. விலங்குகள் மற்றும் மனிதர்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, பாமாயிலில் உள்ள டோகோட்ரியினால்ஸ் மூளையில் உள்ள மென்மையான பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்ஸ்களை பாதுகாக்க உதவுகின்றன மற்றும் டிமென்ஷியா, பக்கவாதம் ஏற்படும் அபாயங்களையும் குறைக்க உதவுகின்றன.
2. இதய நோய்களுக்கு எதிராக பாமாயில் பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது. இதை நோய் அபாயங்களை ஏற்படுத்தும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் லெவலை குறைப்பது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் எச்டிஎல் கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை இதயத்திற்கு பாமாயில் அளிக்கிறது.
3. ரெட் பாமாயில் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. ரெட் பாமாயிலில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது, இதை உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றி கொள்கிறது.
Read more ; இனி வாடகை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்..!! – வீட்டு வாடகைக்கான புதிய விதிகள் அமல்