பாராசிட்டமால் மாத்திரை எடுப்பது நல்லதா? -ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
குறைந்த அளவு பாரசிட்டாமல் மாத்திரைகள் கூட இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது. ஆனால் குறைந்த அளவு பாரசிட்டாமல் கூட இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
சமீபத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாராசிட்டமால் உட்பட 14 வகையான கலவை மருந்துகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. வலி நிவாரணி என பொதுவாக அறியப்படும் பாராசிட்டாமல் இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என்றும் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் எனவும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது.
டேவிஸ்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் கேப்ரியேலா ரிவேராவின் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்காக எலிகளுக்கு பாராசிட்டாமல் வழங்கப்பட்டது. 7 நாள் சோதனைக்கு பிறகு எலிகளின் இதய திசுக்கள் மாறியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாராசிட்டாமல் மாத்திரைகளில் விளைவாக உறுப்புகள் எவ்வாறு செயலிழக்கிறது என்பதை இது காட்டுகிறது. கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நடந்த அமெரிக்க உடலியல் உச்சி மாநாட்டில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து ஆராய்சியாளர்கள் கூறியதாவது, “பாராசிட்டாமல் மருந்தை பயன்படுத்துவதால் இதயம் மற்றும் கல்லீரல் சேதமடையா வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தேசிய சுகாதார சேவையின் அறிக்கையின் படி, பெரியவர்கள் 500 mg மாத்திரைகளை 4 மணி நேர இடைவேளியில் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் 24 மணி நேரத்தில் 8 மாத்திரைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது” எனவும் தெரிவித்தனர்.