For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவதால் ஆபத்தா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

05:05 AM May 07, 2024 IST | Chella
கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவதால் ஆபத்தா    கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Advertisement

கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

முட்டையில் எல்லா வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் நீங்கள் வேக வைத்து அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

முட்டையில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் புரதங்கள் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. முட்டையில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும். அதுபோல லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முட்டையில் உள்ளது.

இது கண்ணின் விழித்திரையில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளதால், இது உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!

Advertisement