இந்த விளக்கை ஏற்ற எண்ணெய் வேண்டாம், தண்ணீர் போதும்..
கார்த்திகை தீபத் திருநாள் கோலாகலமாக நேற்று முதல் (டிச.13) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வழக்கம் போல் அகல் விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது. பொதுவாக, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான் விற்பனை செய்யப்படும். அந்த விளக்குகளில், நாம் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் வழக்கம். ஆனால் தற்போது மழை காலம் என்பதால், தீபத்தை அதிக நேரம் வெளியே வைக்க முடியாது. மேலும், பல சமயங்களில் தீபத்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் சுட்டித்தனத்தை கருத்தில் கொண்டு, சிலர் விளக்கேற்றுவதற்கே பயன்படுவது உண்டு. ஆனால், இந்த கவலைகள் இனி உங்களுக்கு வேண்டாம்.
தற்போது, தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆம், அது சென்சார் தொழில் நுட்பத்தில் தண்ணீரில் எரியும் அகல் விளக்கு. இத்தகைய அகல் விளக்குகள், கோவை நகரின் பேன்சி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இது போன்ற விளக்குகள் ஆன்லைனில் மலிவான விலையில் கிடைக்கிறது. பொதுவாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி, திரி வைத்து பற்ற வைக்க வேண்டும். ஆனால் இந்த சென்சார் தொழில் நுட்பத்தில் எரியும் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றினாலே போதும். பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இந்த விளக்கில் திரிக்கு பதில், சிறிய பல்பு இருக்கும்.
இதனால், எண்ணெய் ஊற்றும் இடத்தில் தண்ணீர் ஊற்றினால், சென்சார் மூலம் சிறிய பல்ப் எரியத் தொடங்கிவிடும். ஒரு பெட்டியில் 6 விளக்குகள் இருக்கும் இந்த விளக்கு வெறும் 30 ரூபாய் தான். மண் விளக்கை போன்று எண்ணெய் தீர்ந்துவிடும் பிரச்சினையோ, கொட்டிவிடுமோ என்ற அச்சமோ இல்லாமல், தண்ணீரை மட்டும் ஊற்றினால் போதும். இதனால் செலவும் மிச்சம். இதனை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
Read more: இனி சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..