கோழி கறியை தோலுடன் சாப்பிட்டால் ஆபத்தா? எச்சரிக்கும் ஆய்வுகள்
கோழி கறியை தோலுடன் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக ஆபத்து என ஆய்வுகளின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.
சிக்கனை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை அனைவரையும் கட்டிபோட்டு வைத்துள்ளது. ஆனால், கோழியின் ஒரு பகுதி ஆரோக்கியமானதாக இருந்தாலும், மற்றொரு பகுதி ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிக்கனில் புரத சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனினும் கோழி இறைச்சி ஒரு ஆரோக்கியமான இறைச்சி என்றாலும், கோழியின் தோல் பகுதி ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. கோழியின் தோலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அதிகளவு உள்ளது. இதனால் நாம் எந்த ஒரு ஊட்டச்சத்தையும் பெறுவதில்லை. மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு உள்ளது. இதில் சத்தான பொருட்கள் எதுவும் இல்லை, எனவே இது கோழியின் மிகவும் பயனற்ற பகுதியாகும். இது குளோரின் எச்சங்களைக் கொண்டிருக்கலாம். அவை சிக்கனின் தோற்றத்தை புதியது போல வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக, கோழியை கவர்ச்சிகரமானதாக காட்டுவதற்கு கடைக்காரர்கள் அதன் மீது ரசாயனங்களைத் தெளித்து விற்பனை செய்கின்றனர்.
மேலும் கோழியின் தோலை உண்பதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு சேரும் மற்றும் உங்களது உடல் எடை கூடலாம். மேலும், கோழியின் தோலை உண்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. USDA இன் ஆராய்ச்சியின் படி, தோலை நீக்கி சமைத்த ஒரு கப் கோழியில் 231 கலோரிகள் உள்ளன, அதே சமயம் தோல் நீக்காமல் சமைக்கப்பட்ட கப் கோழியில் 276 கலோரிகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு கோழித் தோல் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது கறியின் சுவையை இரட்டிப்பாக்கும். எனினும் கோழியின் தோலைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இருப்பினும் ஆரோக்கியமான முறையில் சாப்பிட இரண்டு அல்லது மூன்று முறை கழுவி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சமைக்கலாம். எனவே கோழியின் தோலை சாப்பிடக்கூடாது என்பதே பொதுவான கருத்தாக நிலவி வருகிறது.
Read More: 45 மணி நேர தியானத்தில் பிரதமர்..! அவசர அரசு வேலைகளை கையாள்வது யார்..?