முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தண்ணி குடிச்சது ஒரு தப்பா?… பட்டியலின இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!… உ.பி.யில் கொடூரம்!

06:45 AM Nov 30, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞரை, அப்பகுதி மக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். 24 வயது இளைஞரான இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இவர், கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அங்குள்ள பொதுக் குழாயில் ஒன்றில் தண்ணீர் குடித்துள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சார்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் பார்த்துள்ளனர். பின்னர், அந்தக் குழாயில் கமலேஷ் தண்ணீர் குடித்ததற்காக அவரை தடியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கமலேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதுகுறித்து கமலேஷின தந்தை அளித்த புகாரின்பேரில் சூரஜ் ரத்தோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சாதிய ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து அரங்கேற்றப்படுவது வேதனை அளித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்ததற்காக இதர சமூகத்தினரால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
அடித்து கொலைஇதர சமூகத்தினர்உ.பி.யில் கொடூரம்பட்டியலின இளைஞர்பொதுக்குழாயில் தண்ணீர் குடிச்ச இளைஞர்
Advertisement
Next Article