பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு HIV தொற்று பாதிப்பு உண்மையா..? அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குறித்து அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலானது. அதாவது, சவுக்கு சங்கருக்கு ஹெச்ஐவி தொற்று உள்ளதாகவும், இது மருத்துவ பரிசோதனை அறிக்கை என்றும் தகவல்கள் பரவின. சில அரசியல் பிரமுகர்களுமே சவுக்கு சங்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில், தனக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக வெளியான தகவலுக்கு சவுக்கு சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட அறிக்கையில், "அண்மையில் எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனது சிகிச்சைக்கான ஆவணம் தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது.
அந்த திருடப்பட்ட ஆவணத்தை மாற்றி, நான் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று போலியாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. இந்த மருத்துவ ஆவணம் முற்றிலும் போலியானது. நான் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பற்றிய செய்தி முற்றிலும் தவறானது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்..!! இந்த லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா..? என்ன செய்ய வேண்டும்..?