For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா...? பரபரப்புக்கு மத்தியில் நிறுவனம் விளக்கம்...!

06:20 PM May 02, 2024 IST | Vignesh
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா     பரபரப்புக்கு மத்தியில் நிறுவனம் விளக்கம்
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

கொரோன வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த இந்திய மருத்துவ துறையுமே போராடியது. அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது. அந்தவகையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது.

சில நாட்களுக்கு முன் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியது. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை படுத்தியது. கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் தனது அறிக்கையில்; கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. ரத்தம் உறைதல், இதயம் பிரச்னை உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவிஷீல்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது என பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement