முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

லாக் டவுனுக்கு தயாரான சீனா?… புதிய வகை மர்ம காய்ச்சல்!… கொரோனாவை விட கொடியது!… மூச்சுவிட முடியாமல் குழந்தைகள் பாதிப்பு!

07:28 AM Nov 24, 2023 IST | 1newsnationuser3
Advertisement

சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

Advertisement

இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் புதிதாக சுவாச பிரச்சனை ஏற்படும் புதிய வகை மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது. சீனாவில் இப்போது மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நவ. 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் ​​தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், சீனா முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்றனர். இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவலை அதிகாரிகள் மறைக்கிறார்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பும் சரியாக 2019 டிசம்பரில் இந்த அமைப்பு புது நோய்ப் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது, 76 வது உலக சுகாதார மாநாட்டில், ``கொரோனாவைவிட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறினார். அதன்படி, சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு மர்ம காய்ச்சல் என்ற செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
குழந்தைகள் பாதிப்புகொரோனாவை விட கொடியதுசீனாபுதிய வகை மர்ம காய்ச்சல்மூச்சுவிட முடியாமல்லாக் டவுன்
Advertisement
Next Article