"அடுத்து வரும் பெருந்தொற்று."! நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் பூஞ்சை..!! அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்.!
கொரோனா நோய் தொற்றின் அச்சம் மறைவதற்குள் பூஞ்சை நோய் தொற்று பற்றிய செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அச்சம் பொது மக்களிடம் நிலவி வருகிறது.
கடந்த 2019 ஆம் வருட இறுதியில் சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பல லட்சம் மக்களின் உயிரை குடித்ததோடு உலகையே முடக்கியது. இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் இந்த நோய் தொற்றின் அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கேண்டிடா ஆரிஸ் என்ற பூஞ்சை தொற்று பரவல் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று இருப்பது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நகரில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு இந்த தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூஞ்சை தொற்று பெருமளவில் பரவவில்லை என்றாலும் இந்த நோய் தொற்றின் தாக்கம் மற்றும் வீரியம் பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கிறதுகேண்டிடா ஆரிஸ் இன்று பூஞ்சை தொற்று மிகவும் வேகமாக பரவும் தன்மையுடையது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குவதோடு உணவுக் குழாய் மற்றும் சுவாச குழாய் போன்றவற்றை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரத்த ஓட்டத்தை பாதித்து உடலின் பல பகுதிகளிலும் காயங்களை ஏற்படுத்தும் தன்னைக் கொண்ட இந்த ஒன்றைத் தொற்று இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருக்கிறது என்பதுதான் பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கிறது. மேலும் இந்த கேண்டிடா ஆரிஸ் நோய்க்கிருமி ஒருவருக்கு நோய் தொற்றை ஏற்படுத்தாமல் வேறொரு நபருக்கு பரவும் தன்மை கொண்டது என்பதுதான் இந்தப் பூஞ்சை தொற்றை அபாயகரமானதாக ஆக்குகிறது.
இது ஒருவரது தோளில் ஒட்டிக்கொண்டே மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது. இதனால் கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்றின் வீரியம் மற்றும் தாக்கம் அதிகமாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகை பூஞ்சை தொற்று ஜப்பானில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூஞ்சை தொற்றின் பாதிப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016 ஆம் வருடம் 53 பேர் இந்த பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2022ஆம் வருடம் 2,000-திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் தொற்றின் பாதிப்பு அமெரிக்கா உட்பட 40 நாடுகளில் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது. கேண்டிடா ஆரிஸ் பூஜை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதோடு அவர்கள் இருக்கும் அறையை ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் நோயாளியை பார்ப்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களும் கவச உடை அணிந்துதான் அவர்களை அணுக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.