For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவால் தலைமறைவான நடிகை கஸ்தூரி..? வலைவீசி தேடும் போலீஸ்..!!

While actress Kasthuri filed a petition seeking anticipatory bail in the case of her controversial speech about Telugu people, Judge Anand Venkatesh dismissed the petition.
07:42 AM Nov 15, 2024 IST | Chella
நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவால் தலைமறைவான நடிகை கஸ்தூரி    வலைவீசி தேடும் போலீஸ்
Advertisement

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில் கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

Advertisement

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ”தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் கஸ்தூரியின் வாயில் இருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை. கஸ்தூரியின் பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்துள்ளது. பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. கஸ்தூரி பேச்சு வெறுப்பு பேச்சாகவே உள்ளது.

மனுதாரரின் ட்வீட் மூலம் மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. தனது பேச்சுகளை நியாயப்படுத்தவே முயற்சித்துள்ளார். கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடும்போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டியது அவசியம். நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால், மோசமான முன்மாதிரி ஆகிவிடும். கேவலமான கருத்து கூறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால் அதில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானாலும் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டுவிடும்.

கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது. இலக்கை அம்பு அடைந்து சேதப்படுத்திவிட்டது. அரை மனதுடன் கோரப்படும் மன்னிப்பு ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து விடாது. எனவே, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : பெற்றோர்களே உஷார்..!! இதை சாதரணமா நினைக்காதீங்க..!! 2 குழந்தைகள் பரிதாப பலி..!! குடும்பத்திற்கே நேர்ந்த சோகம்..!!

Tags :
Advertisement