கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய குடும்பத்தோடு சென்று பெண் கேட்ட பிரபல நடிகர்..! ஆனா நடந்ததே வேற..
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த மாதம் தனது நீண்ட நாள் காதலரும், தொழிலதிபருமான அந்தோணி தட்டிலை திருமணம் செய்ய உள்ளார். இந்த சூழலில் அவரை சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு புரபோஸ் செய்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் - பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி பின்னர் கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் அறிமுகமான கீர்த்தி,
இப்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான இவர், ரஜினி முருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் கீர்த்தி.
ஆனால் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது நடிகையர் திலகம் படம் தான். நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான இந்த படத்தின் சாவித்ரியாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் ஆசியுடன், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் திருப்பதிக்குச் சென்ற பிறகு கீர்த்தி சமீபத்தில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். கோவாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆண்டனியின் குடும்ப பாரம்பரியத்தின்படி கீர்த்தி - ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளது.
கோவாவில் நடைபெறும் திருமணத்தில், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.. சென்னை அல்லது கேரளாவில் ஒரு பிரமாண்ட வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவர் புரபோஸ் செய்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தியுடன் இணைந்து பணியாற்றியபோது அவர் மீது காதலில் விழுந்த ஒரு முக்கிய நடிகர், தனது குடும்பத்தினர் உடன் கீர்த்தியை சென்று பெண் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அது வேறு யாருமல்ல, நடிகர் விஷால் தான். லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படப்பிடிப்பின் போது தான் விஷாலுக்கு கீர்த்தி மீது காதல் ஏற்பட்டதாம்.
எனினும் தனது காதலை கீர்த்தியிடம் சொல்லாத விஷால், வெளிப்படுத்தாமல், தனது குடும்பத்தினர் மூலம் அவரை பெண் திருமணம் செய்ய கேட்டுள்ளார். ஆனால் நீண்ட காலமாக ஆண்டனி தட்டிலை காதலித்து வரும் கீர்த்தி விஷாலின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Read More : ஆள விடுங்கடா சாமி…. எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்…