இந்த 'ஸ்பேம்' (Spam) கால்கள் வந்தாலே எரிச்சலா இருக்கா.? கவலை வேண்டாம்.! இதோ ஈஸி ட்ரிக்.!
ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தொந்தரவுகளில் ஒன்று ஸ்பேம் அழைப்புகள். இவை பெரும்பாலும் டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து விற்பனை தொடர்பான அழைப்புகளாக இருக்கும். அல்லது மோசடி கும்பல்களும் இந்த அழைப்புகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற நினைக்கலாம்
அனேகமான அழைப்புகள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்புடையதாக இருக்கும். சில அழைப்புகள் மோசடி நபர்களும் பயன்படுத்துவது உண்டு. இது போன்ற அழைப்புகள் பெரும்பாலும் எரிச்சலை ஏற்படுத்துபவையாக இருக்கும். இது போன்ற அழைப்புகளை எவ்வாறு பிளாக் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே இது போன்ற அழைப்புகளை பிளாக் செய்வதற்கு என்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் தனி வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொபைலின் டயலரை பயன்படுத்துவது என்றால் செட்டிங்கில் சென்று ஸ்பேம் அழைப்புகளை ஃபில்டர் செய்து பிளாக் செய்யலாம். எனினும் அனைத்து ஸ்பாம் அழைப்புகளையும் ஒரே மெசேஜில் பிளாக் செய்யும் வசதி இருக்கிறது.
இதில் 1909 என்ற எண்ணிற்கு ஃபுள்ளி பிளாக்(fully block) என்று மெசேஜ் அனுப்பினால் போதும். அடுத்த நொடி நமக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும். இந்த மெசேஜ் வந்த 24 மணி நேரத்தில் அனைத்து ஸ்பேம் அழைப்புகளும் ஸ்பேம் மெசேஜ்களும் தடை செய்யப்பட்டு விடும். நீங்களும் ஸ்பேம் அழைப்புகளால் எரிச்சல் அடைகிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.