பிரபல நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியில் முறைகேடு..!! சிபிஐ வலையில் சிக்குகிறார் நடிகை ரோஜா..!!
நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த போது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் முறைகேடு செய்ததாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா செல்வமணி. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. இவர், மூன்றாவது முறை நகரி தொகுதியில் போட்டியிட்டு இந்த முறை படுதோல்வி அடைந்தார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சி இருந்த போது ஆடுதாம் ஆந்திரா எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சி தோல்வி அடைந்தது. இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கியதாக அறிவித்திருந்தது.
ஆனால், இந்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றைய தினம் ஆத்யா- பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அதிகாரிகளிடம் இந்த முறைகேடு குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நடிகை ரோஜாவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
Read More : ஜூலை 22ஆம் தேதி மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல்..? என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்..?